சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது

புதுக்கோட்டையில் 15 வயது பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது.;

Update: 2021-08-19 08:45 GMT

கைது செய்யப்பட்ட மாரிமுத்து. 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 28. இவர் 17 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து குற்றம் உறுதியான நிலையில், 17 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News