கீரனூரில் இன்று முதல் வியாபாரிகளுக்கு தராசு மறுமுத்திரை முகாம் துவங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு தராசு மறுமுத்திரையிடும் முகாம் இன்று முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது;
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் பகுதியில் உள்ள வணிகர்களுக்கு தராசு மறுமுத்திரையிடும் முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகின்ற 23ஆம் தேதி வரை கீரனூர் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
முகாமில் குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து வணிகர்களும் தங்களது கடைகளில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான தராசுகள், 2021 ஆம் ஆண்டிற்கான தங்களது வியாபாரத்தில் பயன்படுத்தும் எடை தராசு, மின்னணு தராசுகள், கூம்பிய அளவைகள், ஊற்றல் அளவைகள் ஆகியவற்றினை மறுமுத்திரை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தாங்கள் பயன்படுத்தும் தராசுகள் சரியான எடையை காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள மறுமுத்திரை செய்ய வேண்டும் என திருச்சிராப்பள்ளி சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி தங்கராசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.