கழுத்தில் உடைந்த குடத்துடன் சுற்றித்திரியும் வாயில்லாத ஜீவன்
கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்;
குடத்தில் தண்ணீர் குடிக்கச் சென்ற நாயின் கழுத்தி குடத்தின் மேல் பகுதி உடைந்து மாட்டிக்கொண்டதால் பரிதாபத்துடன் சுற்றித் திரிகிறது..
புதுக்கோட்டை மாவட்டம் ,நார்த்தாமலை அருகே உள்ள நெடுஞ்சேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த குடத்தில் தண்ணீர் குடிப்பதற்காக நாய் குடத்தில் தலையை நுழைத்தபோது எதிர்பாராதவிதமாக உடைந்ததால் நாயின் தலைப்பகுதியில் குடத்தின் வாய்ப்பகுதி வளையம் போல மாட்டிக்கொண்டது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாயின் தலையில் மாட்டிக் கொண்ட குடத்தின் மேல் வாய்ப்பகுதியை எடுப்பதற்கு முயற்சி செய்தும் எடுக்க முடியாததால் நாயை அப்படியே விட்டுவிட்டனர்.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடத்தின் மேல் முடிவுடன் அந்த நாய் அப்பகுதியில் சுற்றித் திரிகிறது நாயின் மேல் மாட்டிக் கொண்டுள்ள முடியை எடுப்பதற்கு பொதுமக்கள் முயற்சித்தும் அதனை எடுப்பதற்கு முடியாததால் தற்போது அந்த கிராமம் முழுவதும் குடத்தின் மூடியுடன் அந்த நாய் பரிதாபமாக சுற்றித் திரிகிறது.
நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நாய்க்கு தேவையான உணவுகளை அளிக்கின்றனர். ஆனால் குடத்தின் மேல்பகுதி மாட்டிக் கொண்டிருப்பதால் நாய் உணவை உண்ண முடியாமல் சிரமப்பட்டு வருகிறது.
எனவே அங்கு உள்ள கால்நடை மருத்துவர்கள் நாயின் தலையில் மாட்டி கொண்டுள்ள குடத்தின் மேல் வாய்ப்பகுதியை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்த வாயில்லா ஜீவன் பட்டினிகிடக்காமல் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது.எனவே கால்நடை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.