நியாயவிலை கடைகள் இன்று முதல் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழக அரசின் உத்தரவுபடி மாற்றம் செய்யப்பட்ட நேரங்களில் நியாய விலைக்கடை இயங்கியது.;
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன இந்நிலையில்,
இன்று முதல் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முற்பகல் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீரனூர் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை, நியாயவிலை கடைக்கு சென்று இரு வேளைகளிலும் பெற்று சென்றனர்..