அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை : திறந்து வைத்த எம்எல்ஏ சின்னத்துரை
வளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.;
கந்தர்வகோட்டை அருகே வளம்பட்டியில் உள்ள அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்துவத்த சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா வளம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி மற்றும் வட்டார கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் வட்டார கல்வி அலுவலர் பொன்னழகு வட்டார கல்வி அலுவலர் கருணாகரன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பாமா பாலமுருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனை உடனடியாக நிறைவேற்றி தருவதாக பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வாக்குறுதி அளித்தார்.