தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சில்வர் தட்டு, குலுக்கல் முறையில் தங்க காசு பரிசு

கொரோனா ஊசி போட்டவர்களுக்கு தங்க காசு, சில்வர் தட்டு பரிசு அறிவித்த ஊராட்சி மன்ற தலைவர்.

Update: 2021-09-19 14:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில்  தடுப்பூசி போட்டுக் கொண்டு  வர்களுக்கு சில்வர் தட்டுகளை பரிசாக வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி முருகானந்தம்

கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வந்த சூழ்நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனாலும் பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அச்சம் நிலவியதால் தமிழகத்தில் பல்வேறு தடுப்பு ஊசி முகாம்களை தமிழக அரசு நடத்தியது. ஆனாலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டாத நிலையில் இருந்து வந்தது.

சென்ற வாரம் தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி முகாமை அறிவித்து. தமிழகம் முழுவதும் பல லட்சம் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் .

அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் 100% தடுப்பூசி தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்களும் தமிழக அரசு விருதுகள் வழங்கி பாராட்டியது.

இந்த நிலையில் இன்றும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமில் முள்ளங்குறிச்சி ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ஏதுவாக ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி முருகானந்தம் பொதுமக்களிடையே ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதில் இன்று நமது ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி மேளாவில் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் அனைவருக்கும் சில்வர் தட்டு பரிசுகள் வழங்கப்படும்.

அதேபோல் குலுக்கல் முறையில் ஒரு நபருக்கு தங்க காசும் வழங்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனால் இன்று முள்ளங்குறிச்சி ஊராட்சியில் காலையிலேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டும் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து சில்வர் தட்டுகள் பரிசுகளாக பெற்றுச் சென்றார்.

அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரிடத்திலும் பெறப்பட்ட டோக்கன்களை குலுக்கல் முறை நடத்தி அதில் வெற்றி பெற்ற ஒரு நபருக்கு தங்க காசும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி முருகானந்தம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நேரத்தில் இன்று முள்ளங்குறிச்சி ஊராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சில்வர் தட்டு மற்றும் தங்க காசு பரிசுகள் வழங்கி தடுப்பூசி போடும் ஆர்வத்தை பொது மக்களிடம் ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி முருகானந்தத்தை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News