மாவட்டத்தில் முதல் முறையாக காளைகளின் கொம்பில் பொருத்தப்பட்ட ரப்பர் குப்பிகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

Update: 2022-03-24 09:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் முதலாக கூர்மையாக உள்ள மாடுகளின் கொம்புகளுக்கு  ரப்பர் குப்பி மாற்றப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக  ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளின் கூர்மையான கொம்புகளில் ரப்பர் குப்பிகள் மாட்டி அவிழ்த்துவிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது .

போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்றன.காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களைப் பிடியில் சிக்காமல் வீரர்களை திணறடித்தன. அதேபோன்று அடங்க மறுக்கும் காளைகளை வீரர்கள் அடக்க முயற்சி செய்தனர்.

சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது பல காளைகள் வீரர்களின்  பிடியில் சிக்காமல் போக்கு காட்டியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும் வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகள் கூர்மையாக உள்ள காளைகளுக்கு கொம்புகளில் ரப்பர் குப்பி மாட்ட வேண்டுமென்றுமத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை ஜல்லிக்கட்டு போட்டி கண்காணிப்பாளர் மிட்டல் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கொம்புகள் கூர்மையாக உள்ள காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பிகள் மாட்டப்பட்டன. ஆனால் காளைகள் சிறிது தூரம் சென்றவுடன் காளைகளின் உரிமையாளர்கள் கொம்புகளில் மாட்டப்பட்ட ரப்பர் குப்பிகளை அகற்றி போட்டிகளில் தங்களது காளைகளை அவிழ்த்து விட்டனர்.. இதனை  தடுக்க முறையாக கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News