புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கீரனூரிலிருந்து மேட்டுப்பட்டி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது,நாஞ்சூர் அருகில் வரும் பொழுது, தெம்மாவூர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சசிக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நடராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும்,விபத்து குறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சசிகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.