துப்புரவு பணியாளர்களுக்கு சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஓய்வில்லாமல் உழைக்க கூடிய 40க்கும் மேற்பட்ட தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் காய்கறி அரிசி முக கவசம் உள்ளிட்டவைகளை நிவாரணமாக வழங்கினர்.
இதில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் சர்வதேச உரிமை கழகத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.