இறந்தவரின் சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்

மயானம் செல்வதற்கு பொதுப்பாதையும், கொட்டகையும் அமைத்து நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2021-11-20 10:30 GMT

கந்தர்வகோட்டை அருகே இறந்தவரின் சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற உறவினர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே இறந்தவரின் சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் இடுகாட்டுக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, துவார்-கெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகெண்டையார். இவர் உடல்நலக்குறைவால் நேற்று  காலமானார்.  இவரது பூதஉடலை எடுத்துச் செல்ல இடுகாட்டிற்கு பொதுப்பாதை இல்லாத காரணத்தால்,  புதுக்குளம் மற்றும் பெரிய குளத்தில் இறங்கிய  கழுத்தளவு தண்ணீரில்  இறங்கி இடுகாட்டுக்கு செல்லும் சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் அனைவரும் இக்குளத்தில் இறங்கி, கழுத்தளவு நீர் மட்டம் கொண்ட இரண்டு குளங்களையும் கடந்து சென்று,  கறம்பக்குடி தாலுகா பகுதியைச் சேர்ந்த பெரியகுளம் கரையில் உள்ள இடுகாட்டில்  தகனம் செய்தனர்.

இது குறித்து,  கெண்டையன்பட்டி கிராம பொதுமக்கள் கூறுகையில், கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து சமூகத்தினருக்கும் ஒரே இடுகாடு என்பதால், இறந்தவர்களின் உடலை உடல் தகனம் செய்ய பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அரசு தரப்புக்கு மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  பொது மக்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மயானம் செல்வதற்கு பொதுப்பாதையும், மயானக் கொட்டகை அமைத்து பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News