புதுக்கோட்டை: மாத்தூர் அருகே சட்டவிரோதமாக மண் கடத்திய நபரை தேடும் போலீஸார்

மாத்தூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் தப்பியோடிய ஓட்டுனர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Update: 2021-07-18 17:48 GMT

மாத்தூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார் தப்பியோடிய ஓட்டுனர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம்,மாத்தூர் அருகில் எழுவம்பட்டி பகுதியில்,  சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் இன்றி, சிலர் கிராவல் மண் கடத்தலில் ஈடுபடுவதாக, மாத்தூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலை தொடர்ந்து, மாத்தூர் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை அறிந்த, கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட, சூரியூர், எழுவம்பட்டி பகுதியை டிரைவர் அசோக்,    டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றார்.இதனைத் தொடர்ந்து, டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Tags:    

Similar News