புதுக்கோட்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் மரணம்.
தமாக மாவட்டதலைவர் பதவியில் சிறப்பாக செயல்பட்ட கூகூர்சண்முகத்தின் திடீர் மறைவு நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது;
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்த கூகூர் சண்முகம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
காங்கிரஸில் இருந்து ஜி.கே.வாசன் விலகி தனிக்கட்சி தொடங்கியபோது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கூகூர்சண்முகம், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு, வடக்கு மாவட்டத்தலைவராக கட்சிப்பணியாற்றி வந்தார். மேலும்,நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்று பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார் கோயில் அருகே உள்ள கூகூர் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் இருந்த கூகூர்சண்முகம் இன்று காலையில் காலமானார்.
இவருடைய மறைவிற்கு, திமுக, காங்கிரஸ், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராக சிறப்பாக செயல்பட்ட கூகூர்சண்முகத்தின் திடீர் மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
.