புதுக்கோட்டை: சாலையில் பிரம்மாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சாலையில் பிரம்மாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

Update: 2021-06-03 10:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காந்தி சிலை அருகே வரையப்பட்டுள்ள பிரம்மாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காவல் துறை சுகாதாரத் துறை, வருவாய் துறை, துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்பதற்காக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் இன்று கீரனூர் காந்தி சிலை முன்பு வரையப்பட்டது. கீரனூரில் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியத்தை கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் பேரூராட்சி ஊழியர்கள், மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Tags:    

Similar News