புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இ. கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்
புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.;
புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியை தர வேண்டு , செங்கல்பட்டில் தடுப்பூசி ஆலை அமைக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்