போலீஸ் வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது

புதுக்கோட்டை கீரனூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் அன்பழகனிடமிருந்து வாக்கி டாக்கியை திருடிச் சென்ற 4 பேர் கைது.

Update: 2021-09-25 06:00 GMT

கைது செய்யப்பட்ட இன்ப சுரேஷ், முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 4 பேர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன். இவருக்கும் இவரது நண்பர்களான இன்ப சுரேஷ், முகேஷ் கண்ணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி காவலர் அன்பழகனை அவரது நண்பர்கள் இன்ப சுரேஷ் மற்றும் முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 4 பேர் சமரசம் பேசுவதற்காக அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

காவலர் அன்பழகன் போதையில் இருக்கும்போது அவரிடமிருந்து வாக்கி டாக்கி திருடிக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போதை தெளிந்த பிறகு தான் காவலர் அன்பழகனுக்கு வாக்கி டாக்கி காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்பழகன் கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் இந்த உண்மைகள் தெரிய வந்தன. இதனைத் தொடர்ந்து வாக்கிடாக்கி திருடிச் சென்ற இன்ப சுரேஷ், முகேஷ் கண்ணன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் மேற்கொண்ட விசாரணையில் நடந்த உண்மைகள் தெரியவந்தன. இதனைத்தொடர்ந்து இதுதொடர்பான தகவல்கள் அறிக்கையாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேல் நடவடிக்கை எடுத்து காவலர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News