மழையினால் சேதமடைந்த நெல் வயல்களை பார்வையிட்ட கந்தர்வகோட்டை எம்எல்ஏ

கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்கால் கிராமத்தில் 2 விவசாயிகளின் 8 ஏக்கர் வயலில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டார்

Update: 2021-11-24 02:45 GMT

கந்தர்வகோட்டை பகுதியில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் அதிகாரிகளுடன் பார்வேட்டை எம்எல்ஏ சின்னதுரை

கந்தர்வகோட்டை தொகுதியில் மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களை  எம்எல்ஏ சின்னதுரை  பார்வையிட்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகும் தருவாயில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் இருந்தது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த நெற்பயிர்கள் கணக்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டருந்த நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்கால் கிராமத்தில் நாராயணசாமி, செல்வகுமார் ஆகிய இருவருக்கும் சொந்தமான 8 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் மழையினால் சேதமடைந்தர நெல் பயிர்களை நேரில் சென்று எம்எல்ஏ-சின்னத்துரை பார்வையிட்டார்.

இதில், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகளும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராமையா, ரத்தினவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News