கந்தர்வகோட்டை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்:எம்எல்ஏ சின்னதுரை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கந்தர்வகோட்டை அருகே குடிக்காடு பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்

Update: 2021-10-06 10:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குடிக்காடு           கிராமத்தில் நேரடி நெல்    கொள்முதல் நிலையத்தை திறந்து       வைத்த சட்டமன்ற உறுப்பினர்   சின்னதுரை

 கந்தர்வகோட்டை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அத்தொகுதி  எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக சேமித்து வைத்துள்ளனர். ஆனால், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், தொடர் மழையினால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எதிரே விவசாயிகள் நிலத்தில் கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் முளைத்து வீணாகி வருகிறது.

இந்தச் சூழ்நிலையில்,  புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை  உடனடியாக திறக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கு  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில்,  இன்று புதுக்கோட்டை மாவட்டம்,  கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட குடிக்காடு பகுதியில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ஐயா ஆகியோரின் முன்னிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் திறந்ததற்ககு அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கும்,  மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.


Tags:    

Similar News