கீரனூர் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
கீரனூர் அருகே இன்று அதிகாலையில் நல்லூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகில் நல்லூர் மேலதோப்பு பகுதியில் 65 வயது உள்ள மூதாட்டி ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி ரயில் சென்றுள்ளது. அப்போது காரப்பட்டு நீர்பழனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாலாயி என்ற மூதாட்டி நல்லூர் மேலதோப்பு அருகில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அடிபட்டு இறந்து விட்டாரா அல்லது தற்கொலை முயற்சியில் ஏதேனும் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.