புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அமைச்சர்
கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றினையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.;
சுந்தம்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றினையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சுந்தம்பட்டியில் ரூ.6.67 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 63 கே.வி.ஏ/ 11 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றியினை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி,முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.