ராணுவத்தளபதி உயிரிழந்த சம்பவத்தை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது

ராணுவத்தளபதி உயிரிழந்த சம்பவத்தை விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிறையில் அடைப்பு;

Update: 2021-12-13 12:09 GMT

ராணுவ தளபதி உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்த புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியி நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை விமர்சனம் செய்து தனது யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டிருந்துள்ளார்.

இதுகுறித்து பாஜகவை சேர்ந்த மாவட்ட பிறமொழி தொடர்பு தலைவர் ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில்,    புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் பாலசுப்பிரமணியன் என்பவர் மீது கீரனூர் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு விட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News