கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம்பி திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் எம்பி திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-06-13 14:09 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனையில் எம்பி திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார், அருகில் சின்னதுரை எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் இன்று திருச்சி காங்கிரஸ் கட்சி எம்பி திருநாவுக்கரசர் கந்தர்வகோட்ட சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை அரசு மருத்துவமனைகளில்  ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

அப்பொழுது மருத்துவர்களிடம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தடுப்பூசி மருந்துகளை கையிருப்பில் அதிகளவில் வைத்துக்கொள்ள வேண்டும் கொரோன வைரஸ் தொற்று தற்பொழுது கந்தர்வகோட்டை தொகுதியில் குறைந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றார். 

 மேலும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் போதுமானதாக இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சி எம்பி திருநாவுக்கரசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் கேட்டறிந்தனர் இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர

Tags:    

Similar News