ஒரே நாளில் இரு நிதி நிறுவனங்களில் பணம், லேப்டாப் கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை

கீரனூரில் ஒரே நாளில் இரு நிறுவனங்களில் பணம், லேப்டாப் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-22 12:29 GMT
ஒரே நாளில்  இரு நிதி நிறுவனங்களில் பணம், லேப்டாப்  கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை

கீரனூர் அருகே கொள்ளை நடந்த நிதி நிறுவனம்.

  • whatsapp icon

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியில் இரு தனியார் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கு கடனுதவி அளித்து வரும் இந்நிறுவனங்களில் 12 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு நிறுவனங்களை பூட்டி விட்டு பணியாட்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மர்மநபர்கள், நிறுவனத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா ஒயர்களை அறுத்துவிட்டு, பின்னர் உள்ளே சென்று அங்குள்ள ரூ.1லட்சம் ரொக்க பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

நிறுவனத்தின் காவலாளி இன்று காலை வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான கைரேகைகளைக்கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News