பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்துதர எம்எல்ஏ சின்னத்துரை வாக்குறுதி
அரசு பள்ளியில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எம்எல்ஏ சின்னத்துரை மாணவரிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி தேவைகள் குறித்து உரையாடிய அவரிடம் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளியில் போதுமான வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதி இன்றி மிகுந்த சிரமப்படுவதாக தெரிவித்தனர்.
இதைக் கேட்ட சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக்கு உடனடியாக விசாலாமான பொது கழிப்பறை கட்டிட வசதி செய்வதாக உறுதி அளித்தார்.
கோரிக்கை நிறைவேற்ற உறுதியளித்த சட்டமன்ற உறுப்பினருக்கு பள்ளி ஆசிரியர்கள் ஸ்டாலின் சரவணன், ராதிகா,சேதுராஜன்,சகாயமேரி அனுஜா, சுஜாதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜேந்திரன், கருணாநிதி ,மாணவ , மாணவிகள் உள்ளிட்ட கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பொன்னுசாமி,அரிபாஸ்கர், குணசுந்தரி, மங்கையர்கரசி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.