சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த பெண்ணுக்கு உதவி செய்த எம்எல்ஏ சின்னதுரை

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் விவசாய பெண் தொழிலாளி அடிபட்டு சாலையில் கிடந்தார்;

Update: 2021-10-06 13:59 GMT

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த பெண்ணை தன்னுடைய வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு உதவிய எம்எல்ஏ சின்னதுரை.

 சாலை விபத்தில் அடிபட்டு கிடந்த பெண்மணிக்கு  கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை உதவி செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சின்னதுரை வெற்றி பெற்ற தொகுதி மக்களுக்கு  பல்வேறு பணிகளை செய்து வருகிறார். தொடர்ந்து தொகுதி மக்கள் கூறும் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதுபோல், இன்று கந்தர்வகோட்டை பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வில் கலந்து கொண்டு, இன்று மாலை தனது காரில் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே வரும் பொழுதுகந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் வயலில் நாற்று நட்டு விட்டு சாலையில் நடந்து சென்ற  மணிமேகலை என்ற வயது பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் அடிபட்டு கிடந்தார்.

இதனை பார்த்த எம்எல்ஏ சின்னத்துரை உடனடியாக காரை நிறுத்தி அந்தப் பெண்மணியை தன்னுடைய காரில் ஏற்றி கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைத்தார். வாகன விபத்தில் சாலையில் அடிபட்டு கிடந்த பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக தன்னுடைய வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்த சட்டமன்ற உறுப்பினரினருக்கு   அப்பகுதி மக்கள்  பாராட்டு தெரிவித்தனர்.

 

Tags:    

Similar News