ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
கீரனூர் அருகில் உடையாளிப்பட்டியில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீரங்கம்பட்டி அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் ஆனி மாதம், வருடம் தோறும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று நடைபெற்ற பூஜையில் பெண்கள் பலர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று இரவு நாடகம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கு பூஜையில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.