கீரனூர் அரசு பள்ளியில் கராத்தே, யோகா, சிலம்பம் பயிற்சி விழிப்புணர்வு முகாம்

கீரனூரில் கராத்தே, யோகா, சிலம்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

Update: 2021-07-25 15:43 GMT

கீரனூர் அரசு பள்ளியில் இன்று கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி பெறும் மாணவ மாணவிகள்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கராத்தே, யோகா, சிலம்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாள் பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் மற்றும் குன்றாண்டார் கோவில் ஒன்றிய பெருந்தலைவர் போஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர்.

இந்த பயிற்சி முகாமில் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளின் சிலம்ப விளையாட்டுகள் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கராத்தே, யோகா மற்றும் சிலம்பம் ஆகிய மூன்று கலைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

தற்பொழுது பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே,யோகா மற்றும் சிலம்பம் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் அங்கீகாரம் பெற, துவங்கப்பட்ட புதிய பாடத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் ஒத்த குச்சி, இரட்டை குச்சி, சுருள்வாள், மான்கொம்பு, வேல்கம்பு, பெரியவாள், தொடுசிலம்பம் கராத்தே,சுய பாதுகாப்பு கலைகளில் பயிற்சி பெற்றவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் 5 வயது முதல் 30 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Tags:    

Similar News