மாநிலச் செயலாளரிடம் வாழ்த்து பெற்ற கந்தர்வகோட்டை எம்எல்ஏ

கந்தர்வக்கோட்டையில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற எம்எல்ஏ, கட்சியின் மாநில செயலாளரிடம் வாழத்துப் பெற்றார்.

Update: 2021-05-07 12:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சின்னத்துரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக கூட்டணி சார்பில் கந்தர்வகோட்டை தொகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளர் ஜெயபாரதியைவிட 12 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இன்று சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News