கந்தர்வக்கோட்டை யில் இரு சக்கர வாகன பேரணி போல் செல்லும் பொதுமக்கள்

கந்தர்வக்கோட்டையில் ஊரடங்கு தளர்வால் டூவீலரில் பேரணி போல வாகன ஓட்டிகள் சென்றனர்.

Update: 2021-05-23 11:00 GMT

தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட அலையாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் நாளை முதல் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது

இந்நிலையில் கந்தர்வக்கோட்டை நகர் பகுதியில் சாலையோரமாக பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு செல்கின்றனர் மேலும் கடைவீதி முழுவதும் இருசக்கர வாகனத்தில் பேரணி போல கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்

மேலும் ஒருசில கடை முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி பேருந்து லாரிகள் போன்றவற்றிற்கு இடையூறாகவும் இருந்து வருகிறது

மேலும் ஒருவாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி ரைஸ் மில்லுக்கு சென்று மிளகாய் மல்லி கோதுமை அரிசி போன்றவைகளை தேவைக்கேற்ப அரைத்து வைக்கவும் ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள்

அதேபோன்று மளிகை கடைகள் காய்கறி கடைகள் இறைச்சி கடைகள் போன்ற கடைகளிலும் எல்லைமீறி கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளியை சிறிதும் கடைபிடிக்காமல் சென்று வருகிறார்கள்

காய்கறி வியாபாரிகள் கடந்த வாரத்தை விட இன்று ஒருநாள் அதிகப்படியான விலையில் காய்கறிகளை இன்று காலை முதல் விற்பனை செய்து வருகின்றனர் அதேபோன்று இறைச்சிக் கடைகளும் அதிக அளவில் கூடுதலான தொகையில் விற்பனை செய்து வருகின்றனர்

மேலும் பெட்ரோல் பங்க் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் முக கவசம் இன்றியும் பொதுமக்கள் வாகனத்தில் வந்து செல்கின்றனர் இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

Tags:    

Similar News