கந்தர்வக்கோட்டையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கணும் போலீசார் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீார் எச்சரித்தனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை நகர் பகுதியில் ஒவ்வொரு கடையிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என்று தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மக்கள் தேவைக்கேற்ப அதிகமான பொருட்களை கூட்டம் கூட்டமாக வாங்கிச் சென்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உறுவானது.
காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் கூட்டம் கூட்டமாக கடைக்குள் செல்லக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து எடுத்தனர்