கந்தர்வகோட்டை அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே வீடு புகுந்து நகை பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அக்கட்சிபட்டியை சேர்ந்த கமலகண்ணன் என்பவர் வாடகை வீட்டில் கடந்த 8 மாதமாக குடியிருந்து வருகிறார்,
நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோ சாவியை எடுத்து பீரோவில் இருந்த ரூ 65, ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டரை பவுன் தங்க நகை ஆகியவற்றை எடுத்து விட்டு அவரது செல்போனையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளனர், பின்னர் பக்கத்து வீட்டில் இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.
பின்னர் நேற்று காலை 6 மணிக்கு கமலகண்ணன் மனைவி சரண்யா பீரோ திறந்துள்ளதை பார்த்து அருகில் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ 65 ஆயிரம் ரொக்கம் 2 1/2 பவுன் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கமலகண்ணன் கந்தர்வக்கோட்டை காவல் நிலையில் தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.