தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டினை பார்வையிட்டு ஆறுதல் கூறிய எம்எல்ஏ

கந்தர்வகோட்டை அருகே மின்கசிவால் தீப்பற்றி எரிந்த குடிசை வீட்டினை எம்எல்ஏ சின்னதுரை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்;

Update: 2021-11-16 07:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அதிகாலையில் மின் கசிவினால் புது நகரைச் சேர்ந்த குமார், என்பவரின்  குடிசை வீடு   மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்தது.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவத்தை அறிந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உடனடியாக நேரில் பார்வையிட்டார்.

மின்கசிவால் வீடு எரிந்து வீடு இல்லாமல் தவித்து வந்த வீட்டின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ சின்னத்துரை,  உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை நேரில் வர வைத்து சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்கசிவால் எரிந்த வீட்டிற்கு பதிலாக புதிய வீடு கட்டித்தர ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்  அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News