தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலை: புதுக்கோட்டை அருகே பரபரப்பு
கறம்பக்குடி பகுதியில் தடையை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைத்ததால் பரபரப்பு.;
கறம்பக்குடி அருகே பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை அகற்றி கோவிலுக்குள் கொண்டுவந்து வைக்கும் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விநாயகர் சிலை வீதிகள் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணியினர் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கறம்பக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் சீனி கடை முக்கத்தில் இரண்டு விநாயகர் சிலையை இந்து முன்னணி அமைப்பினர் பொது இடத்தில் வைத்தனர்.
இதனையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பொது இடத்தில் வைத்துள்ள விநாயகர் சிலையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவிலில் இரண்டு விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
பொது இடத்தில் தடையை மீறி இந்து முன்னணியினர் வைத்துள்ள விநாயகர் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.