புதுக்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்
புதுக்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மறைந்த திமுக எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மறைந்த எம்எல்ஏ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.