புதுக்கோட்டையில் ரூ. 6 கோடி மதிப்பு ஆவணம் இல்லா நகைகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தச்சங்குறிச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது தனியார் நகை கடை வாகனம் ஒன்று அந்த வழியாக வந்தது.
அந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி 5 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை கொண்டு செல்வது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தை கேள்விப்பட்ட புதுக்கோட்டை எஸ்.பி., பாலாஜி சரவணன் உடனடியாக கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் வாகன சோதனையில் 5 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.