இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்திய தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்

புதுக்கோட்டையில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்தினார் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன்.

Update: 2022-04-03 03:51 GMT

புதுக்கோட்டையில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்  தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் பிரம்மாண்டமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடன் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.

மேலும் கறம்பக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் சுழற்பந்தினை வீசினார். நிர்வாகிகள் வீசிய பந்தினை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்டார்.

மேலும் தி.மு. க.  இளைஞரணி நிர்வாகிகள் உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியது தி.முக நிர்வாகிகளிடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான முருகேசன், குன்றாண்டார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.குறிஞ்சிவாணன், பேரூராட்சி துணைத்தலைவர் ராசி நைனா முகம்மது, இளைஞரணி அமைப்பாளர் ராசி பரூக், இளைஞரணி துணை அமைப்பாளர் இமயம் பிரபாகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News