புதுக்கோட்டை அருகே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்றுத்திறனாளிகள்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் செலுத்திக்கொண்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி ஆணை பிறப்பித்தார்.
அதன்படி, இன்று மேலப்புதுவயல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த தடுப்பூசி முகாமில் 08 மாற்றுதிறனாளிகள் தடுப்பூசி செலுத்த சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவர், செவிலியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.