அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்த வருவாய் துறை

கீரனூர் அருகில் மேல புதுவயல் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வட்டாட்சியர் பெரியநாயகி திடீர் ஆய்வு

Update: 2021-07-19 16:45 GMT

கீரனூர் அருகே நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த வட்டாட்சியர் பெரியநாயகி

குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் மேல புதுவயல் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது எனவும், நெல் கொள்முதல் செய்வதில் எடை அளவு சரியாக உள்ளதா, நெல்கொள்முதல் ரகங்கள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தேவையான இடவசதி உள்ளதா என்று பார்வையிட்டார்.

மேலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விடாதவாறு தார்பாய்களை கொண்டு மூடி வைக்கவும், அதிகப்படியான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டால் உடனடியாக அவற்றை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் குழு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி உத்தரவிட்டார்.


Tags:    

Similar News