தண்டோரா மூலம் ஊரடங்கு பற்றிய விழிப்புணர்வு
கந்தர்வகோட்டை, மங்கனூர் ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற எந்த கடைகளும் இயங்காது என அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அதன்படி பொதுமக்கள் முறையாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட மங்கனூர் ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் தண்டோரா மூலம் அப்பகுதி கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 12 மணி வரை மட்டும் காய்கறிகள் மளிகை கடைகள் மற்றும் இதர கடைகள் இயங்கும் பனிரெண்டு மணிக்கு மேல் பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மீறி வருவது மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி முழுவதும் தண்டோரா அடித்துக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை பகுதியில் கொரனோ வேகமாக பரவி வருவதால் கந்தர்வகோட்டை பகுதிக்கு மங்கனூர் கிராம பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
#Instanews #TamilNadu #இன்ஸ்டாநி யூஸ் #tamilnadu #தமிழ்நாடு #Pudukottai #Gandharakottai #CurfewAwareness #DrumBeat #புதுக்கோட்டை #கந்தர்வகோட்டை #தண்டோரா #ஊரடங்குவிழிப்புணர்வு #covid19 #lockdown