கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரனோ பரிசோதனை
கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரனோ பரிசோதனை செய்யப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரனோ கொடிய நோய் தொற்று தற்போது இரண்டாம் முறையாக வீசப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பொது மக்கள் முக கவசம், வெப்பநிலை பரிசோதித்தல், சமூக இடைவெளி, கிருமி நாசினி கொண்டு கை கழுவுதல், கையுறை இட்டு வாக்கு செலுத்துதல் போன்ற பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியது.
இதனடிப்படையில் மே மாதம் இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடத்தும் பணி தொடங்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணி புரியும் அனைவரும் கொரனோ பரிசோதனை செய்து சான்று அளித்த பின்னே உள்ளே அனுமதிக்கப்படுவர் என தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து அலுவலர்களுக்கும் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் விசுவநாதன் அவர்கள் தலைமையில் கறம்பக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் விசுவநாதன் மற்றும் கறம்பக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக ஊழியர்களுக்கும் இப்பரிசோதனை செய்யப்பட்டது