கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கீரனூர் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
கீரனூர் பகுதி வியாபாரிகள் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்தக்கோரி மனுவை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதி வியாபாரிகள் பலர் கொரோனா தடுப்பூசி முகாம் தேவை என்று வணிகர் சங்க தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, வணிகர் சங்கத் தலைவர் வீராசாமி, மாவட்ட மருத்துவ அலுவலர் கலைவாணியை இன்று புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கீரனூர் பகுதி வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான, சிறப்பு முகாம் அமைத்து தரும்படி கோரிக்கை மனுவை வழங்கினார். இம்மனுவை, பெற்றுக் கொண்ட மாவட்ட மருத்துவ அலுவலர், இச்சிறப்பு முகாம் நடைபெறுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.