வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கீரனூர் அருகே வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-04 11:46 GMT

கீரனூர் அருகே வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்ப சூழல்களை திறம்பட குறைத்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கீரனூர் அருகில் வீரக்குடி வட்டத்தில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கிராம நிர்வாக அலுவலர், கிராம பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News