கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு

நார்த்தாமலை அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழப்பு.;

Update: 2021-03-24 12:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள நெடுஞ்சேரி விளக்குப் பகுதியில் புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் இன்று புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி பயணம் செய்த கார் எதிரே வந்த மீது மோதியதில், காரில் பயணம் செய்த திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சத்தியவாணி முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் இறந்த செல்வராஜின் பேரன் சூரிய பிரகாஷ் என்ற ஆண் குழந்தை சிறு காயங்களுடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான டிப்பர் லாரி நார்த்தாமலை கிராமத்தை சேர்ந்த சின்னு மகன் ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது போலீஸ் விசாரணையில் தெரிகிறது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News