பேருந்து நிலையம் வீசிச்சென்ற பச்சிளம் குழந்தை; இளைஞர்கள் மீட்பு
கறம்பக்குடி பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு வீசிச்சென்ற பச்சிளம் குழந்தைைய அப்பகுதி இளைஞர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பிலாவிடுதி பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு பச்சிளம் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டுள்ளது.
குழந்தையின் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணிப்பையில் சுற்றப்பட்டு கிடந்துள்ளது.
இதனையடுத்து, அந்தக் குழந்தையை மீட்ட அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், துணை வட்டாட்சியர் ராமசாமி மற்றும் கறம்பக்குடி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதோடு சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வந்த சைல்டு லைன் அமைப்பினர் உடனடியாக பச்சிளம் குழந்தையை வருவாய்த்துறையினரிடம் இருந்து மீட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் வெண்டிலேட்டர் வசந்தியுடன் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இதனிடையே குழந்தையை வீசி சென்ற நபர்கள் யாரென்று தெரியாததால் இதுகுறித்து பிலாவிடுதி விஏஓ தீபிகா அளித்த புகாரின் அடிப்படையில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை பேருந்து நிறுத்தத்தில் வீசி சென்ற நபர்கள் யார்..? பெற்றோர்கள் வீசினார்கள்..?அல்லது வேறு யாரும் வீசினார்களா..? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.