புதுக்கோட்டை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கான மத்திய அரசு விருதை அம்புக்கோவில் ஊராட்சி பெற்றது
மத்திய அரசால் வழங்கப்படும் மத நல்லிணக்க ஊராட்சிகான விருதை புதுக்கோட்டை மாவட்டம் அம்புக்கோயில் ஊராட்சி இந்த ஆண்டு தட்டிச்சென்றது.;
மத்திய அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சிகளில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஊராட்சிக்கு, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சிக்கு விருதுகள் மற்றும் 10 லட்சம் ரூபாய் நிதியும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளில் இந்த ஆண்டிற்கு மத நல்லிணக்கத்துக்கான மத்திய அரசின் விருதை அம்புக்கோயில் ஊராட்சி தட்டிச் சென்றுள்ளது. மத்திய அரசின் விருது பெற்ற அம்புக்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் சுமன் மற்றும் உறுப்பினர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விருது 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுமன் கூறுகையில், இந்த நிதியை, ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கும் ஊராட்சி வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.