திமுக அரசை கண்டித்து கறம்பக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
2020-2021ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது
கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்த கன மழையால் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து தமிழக அரசு கணக்கெடுப்பு பணியை துவங்கிய விவசாயிகளுக்கு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து அதிமுக தலைமைக்கழகம் இன்று தமிழ்நாடு முழுவதும் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்தது.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிக அளவில் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமென தமிழக அரசை கண்டித்து இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. டெல்டா மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2020-2021ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்தும், நிவாரணம் வழங்க கோரி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கறம்பக்குடி ஒன்றிய நகர பகுதிகள் சார்பில் அதிமுகவினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.