புதுக்கோட்டை புன்னகை அறக்கட்டளை சார்பில் 5000 பனை விதைகள் நடும் விழா
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கலந்து கொண்டு பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார்.;
புன்னகை அறக்கட்டளையின் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வக்கோட்டை தொகுதி கோமாபுரம் ஊராட்சியில்5000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கந்தர்வக்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் தமிழ் அய்யா தலைமை வகித்தார்.கோமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்அன்பு முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கலந்து கொண்டு, பனை விதைகள் நடவு பணியை துவக்கி வைத்தார்.
இதில், புன்னகை அறக்கட்டளையின்கௌரவத் தலைவர் ஜெகன்,நிறுவன தலைவர் கலைபிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், குருதிகொடை ஒருங்கிணைப்பாளர் வயல் சரவணன், கந்தர்வகோட்டை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாபு, சோலையப்பன், முத்து, சுசீந்திரன், கறம்பக்குடி ஒருங்கிணைப்பாளர் மேலவிடுதி முரளி , வாராப்பூர் மகேந்திரன், தச்சங்குறிச்சி பிரகதிஸ்வரன், அறிவுநிதி மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர். கந்தர்வகோட்டை தொகுதி முழுவதும் பல்வேறு இடங்கள் மற்றும் குளக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி இன்று தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.