கோவில் கிடா வெட்டு பூஜையில் கதண்டு கடித்து 3 பேர் படுகாயம்

ஆலமரத்தில் இருந்து கிளம்பிய கதண்டுகள் பக்தர்கள் கடித்ததுடன் அனைவரையும் ஓட ஓட விரட்டியடித்தது

Update: 2021-09-14 17:14 GMT

கோவில் கிடா வெட்டு பூஜையில் கதண்டு கடித்து 3 பக்தர்கள் படுகாயமடைந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுகா, பழைய கந்தர்வக்கோட்டை - அலங்கா முனிஸ்வரர் ஆலயத்தின் கிடாவெட்டு பூஜை இன்று நடைபெற்றது.

அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கிடாவெட்டு பூஜையில் கலந்து கொள்வதற்காக மினிவேன்களில்  வண்டியில் கோவிலுக்கு சென்றுள்ளனர். அலங்கா முனீஸ்வரர் ஆலயத்தில் கிடா வெட்டி சாமிக்கு பூஜை போடும் நேரத்தில், அப்பகுதியிலிருந்த ஆலமரத்தில் இருந்து கிளம்பிய கதண்டுகள் பக்தர்கள் கடித்ததுடன்  அனைவரையும் ஓட ஓட விரட்டியடித்தது. இதில் கதண்டு கடித்து மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், சாமி கும்பிட போன பக்தர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடி கதண்டு கடியில் இருந்து தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த, கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, அப்பகுதியில் கதண்டுக்கு பயந்து பதுங்கி இருந்த பொதுமக்களை மீட்டனர். மேலும், கதண்டு கடித்து படுகாயமடைந்த மூவரையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்களை கதண்டு கடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News