கீரனூர் அருகே15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

கீரனூர் அருகில் ஆயக்குடிவயல் கிராமத்தில் 15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-21 08:04 GMT

கீரனூர் அருகே கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த கல்வெட்டு.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் ஆயக்குடிவயல் கிராமத்தில் கோவில் கட்டுமானம் அழிந்த நிலையில் எஞ்சிய சிவலிங்கம், முருகன்,  சண்டிகேஸ்வரர், விநாயகர் மற்றும் நந்தி சிற்பங்கள் மட்டும் வழிபாட்டில் உள்ளன.

இதனை ஒட்டிய குளக்கரையில் பழைய கட்டுமானங்களுக்கு இடையே சிவன் கோவில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் மேற்பகுதியின் ஓரத்தில் இந்த கல்வெட்டில் "ஸ்வஸ்தி ஸ்ரீ புதுவயல் உடையார் திருவேக பழமுடைய நாயனார் திருவோலக்க மண்டபம் கீரனூர் இறங்கலமீட்டார் தன்மம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கீரனூரை சேர்ந்த இறங்கலமீட்டார்கள் என்னும் குழுவினர், இந்த சிவன் கோவிலுக்கு உற்சவ காலத்தில் இறைவன் எழுந்தருளும் திருகாட்சி மண்டபத்தை நிர்மாணித்து தானமளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இறங்கலமீட்டார்கள் பற்றிய தகவல்கள் பல கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

குறிப்பாக,கீரனூர் உத்தமநாத சுவாமி கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இசைக்கலைஞர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பழமைவாய்ந்த கல்வெட்டுகள் சிற்பங்கள் சிலைகள் என பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News