கீரனூர் அருகே சரக்கு வாகனமும் சொகுசு காரும் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் நெடுஞ்சேரி விளக்கு பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 நபர்களுக்கு பலத்த காயம்.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டாட்டா ஏர்ஸ் வாகனமும், புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த இருவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சேரி விளக்கு அருகில் வரும் பொழுது டாட்டா ஏர்ஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்,டாடா ஏர்ஸ் வாகனத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மேல 2ம் வீதியை சேர்ந்த கனி மகன் அஜ்மல்கான்,
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த சோலை மகன் சுப்ரமணியன் மற்றும் காரில் பயணம் செய்த புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்த செந்தில்நாதன், சபரிநாதன் ஆகிய நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேற்படி,விபத்திற்குள்ளான நபர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.