வீடு கட்ட மணல் வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தங்களுக்கு வீடு கட்ட மணல், சவுடு மண் வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவ பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-07-19 07:49 GMT

தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நரிக்குறவ இன பெண்கள்.

புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி பகுதியில் நரிக்குறவர் காலனி அமைந்துள்ளது. இங்கு 32 நரிக்குறவர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பாரத பிரதமரின் திட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நரிக்குறவர்கள் மக்களுக்கு வீடுகள் கட்டுமான பணிக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நரிக்குறவ இன மக்களான அவர்களுக்கு வீடு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப் பட்டதால் வீடு கட்டுவதற்கு பணம் வசதி இல்லை.

நரிக்குறவ இன மக்களுக்கு கட்டுமான பணிக்கு ஆற்று மணல் மற்றும் சவுடு மண் எடுக்க அனுமதி வேண்டி 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்கள் குடும்பங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.

Tags:    

Similar News